சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாரதிராஜா மற்றும் சின்னராசு என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.