முதியவரிடம் இருந்து பணத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமத்தில் முத்து கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தச்சநல்லூரில் வசிக்கும் முருகன் என்பவர் அங்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து கணேசனிடம் இருந்த 500 ரூபாய் பணத்தை முருகன் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து கணேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.