பேருந்து நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் குட்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் எதற்காக அவர் விஷம் குடித்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.