Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் அமைக்க உள்ள நிலம்…. குத்தகைக்கு கேட்கும் தீர்மானம்…. ரத்து செய்யப்பட்டதாக நகராட்சித் தலைவர் அறிக்கை….!!!!!!

கடையநல்லூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலத்தை குத்தகைக்கு கேட்கும் தீர்மானமானது ரத்து செய்யப்பட்டதாக நகராட்சி தலைவர் கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் நகராட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டமானது எனது தலைமையில் நடைபெற்றது.

தற்பொழுது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பன்மொழிச் சாலை அருகில் அமைந்துள்ள இந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான 8.84 ஏக்கர் பரப்பளவில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய பயன்பாட்டில் இருக்கும் நிலத்தை பொது நோக்கத்திற்காக கடையநல்லூர் நகராட்சி நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன்.

ஆனால் பொதுமக்கள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிடோர் வேண்டுகோள் படி விவசாய பயன்பாடு உள்ள நிலத்தை அறநிலையத்துறையிடம் இருந்து கடையநல்லூர் நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தமிழக அரசு கேட்டுக்கொள்வது என்ற தீர்மானம் கைவிடப்பட்டிருக்கின்றது என கூறியுள்ளார்.

Categories

Tech |