கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடை பகுதியில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் நேற்று முன்தினம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது காட்டாத்துறையை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கண்விழித்து சத்தம் போட்டதால் அவரது கணவர் முதியவரிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் கோபத்தில் அவர் முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் கணவன் மனைவி இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.