Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் முன்…கோர விபத்து…. பஸ்சின் அடியில் சிக்கிய பைக்…!!!

தக்கலை பேருந்து நிலையம் முன் நடந்த விபத்தில் பஸ்சின் அடியில் பைக் சிக்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலை ஒரு அரசு பேருந்து கிளம்பியது. அந்த பேருந்து காலை 7.30 மணி அளவில் தக்கலை பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி விட்டு வெளியே சென்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று நாகர்கோவிலிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்து கொண்டிருந்த இன்னொரு அரசு பேருந்து மீது மோதியது. அதில் பைக் பேருந்தின் அடியில் சிக்கியது.

அந்த பைக்கை ஓட்டி வந்த 44 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் ரோட்டின் வலது பக்கம் தூக்கி வீசப்பட்டார். ஆனால் அவர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தக்கலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையை ஒழுங்கு படுத்தினார்கள். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |