Categories
தேசிய செய்திகள்

பேருந்து பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… 29ஆம் தேதி முதல்… வெளியான சூப்பர் புதிய திட்டம்…!!!!!

கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்மார்ட் பயன அட்டைகள் வெளியிடும் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்று உள்ளது. இதில் முதல் மந்திரி பிரனாயி விஜயன் ஸ்மார்ட்போன் பயண அட்டைகளை வெளியிட்டுள்ளார். இதனை போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜூ பெற்றுக் கொண்டுள்ளார். இது பற்றி முதல் மந்திரி பிரனாயி விஜயன் பேசிய போது முன்பணம் கட்டி பெரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் மூலமாக கேரள அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக திருவனந்தபுரம் நகரில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படுகின்றது. அதன் பின் படிப்படியாக விரிவு படுத்தப்படும். மேலும் ஆர் எஃப் ஐ டி என்னும் தொழில்நுட்ப மூலமாக டிஜிட்டல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இந்த கார்டுகள் வெளியிடப்படுகிறது. இது பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கின்றது.

இதனால் பயணிகள் போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் சில்லறை வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் இருக்காது. அத்துடன் டிக்கெட் வசூலிக்கும் பணத்தை பத்திரமாக வைத்திருந்து ஒப்படைக்கும் கண்டக்டர்களுக்கு சிரமம் ஏற்படாது.  இந்த ஸ்மார்ட் போன் பயன் அட்டைகளை போக்குவரத்து கழக பணிமனைகளில் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு 100 ரூபாய்க்கு அட்டைகள் வாங்கினால் 150 ரூபாய் வரை பயண டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். 200 ரூபாய்க்கு டிக்கெட் வாங்குவதற்கு 10 சதவிகித தொகை கூடுதலாக வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த அட்டைகளை ஏஜென்சி மூலம் விற்பனை செய்வது பற்றி அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.  ரீசார்ஜ் முறையில் ஸ்மார்ட் அட்டைகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்யப்படுகிறது. மேலும் தேவைப்படுபவர்களுக்கு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். அதன் மூலமாக டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலமாக போக்குவரத்துக் கழகத்திற்கு முன்கூட்டியே பணம் செலுத்துவதனால் பலன் கிடைக்கிறது. இதிலுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்ட பின் அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு வருடத்திற்கு மேல் அட்டைகளை பயன்படுத்தாவிட்டால் செயல் இழப்பு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |