Categories
தேசிய செய்திகள்

பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து…. 6 பேர் பலி…… 25 பேர் படுகாயம்….!!!!!

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன் கோட்டில் இருந்து ராஜூரி மாவட்டம் நோக்கி புறப்பட்ட பேருந்து மஞ்ச கோட் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய 25 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதே பகுதியில் நேற்று நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |