Categories
மாநில செய்திகள்

பேருந்து போக்குவரத்திற்கு தடை, கடும் ஊரடங்கு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொது போக்குவரத்தினை அவசியத்திற்கு மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் கேரளாவுடனான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கம் ஏற்படாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலையை தடுக்க தடுப்பூசியின் பங்கு மிக முக்கியம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |