சென்னையில் இன்னும் சில தினங்களில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊரடங்கு தளர்வு களை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் முழுமையாக பேருந்து மற்றும் ரயில் சேவை இயக்கப்படவில்லை. குறிப்பிட்ட அளவில் மட்டுமே பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் இன்னும் சில தினங்களில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகரப் பேருந்துகளை முழுமையாக இயக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். மேலும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்து பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.