அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று புதுக்கோட்டை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை சுந்தரம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பெருங்களூர் வாராப்பூர் பிரிவு சாலையோரம் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்தும் சுந்தர மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.
மேலும் காரில் பயணம் செய்த சுந்தரமூர்த்தி, ராதாகிருஷ்ணன், நந்தினி ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.