பேருந்து மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் இருந்து கேரளா அரசு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆரியங்காவு வாகன சோதனை சாவடி அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து காரில் பயணம் செய்து படுகாயமடைந்த 5 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் காயமடைந்த ஐந்து பேரும் கேரள மாநிலம் காஞ்சிரம்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களது பெயர் மற்றும் முகவரி குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.