தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று காலை 7 மணிக்கு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பொன்னேரி ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்த போது அரியலூர் நோக்கி சாம்பல் லோடு ஏற்றி சென்ற டாரஸ் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர்.
மேலும் லாரி ஓட்டுநரான வேல்ராஜ் என்பவரது கால் விரல்கள் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்ராஜ் உள்பட 21 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.