அரியலூரில் மொபட் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பங்கஜம் என்ற மனைவியும் மற்றும் நடராஜன் என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் பந்தலூர் பகுதிக்கு உறவினர் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாய், மகன் இருவரும் மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மொபட்டில் கோடாலிகருப்பூர் கிராமத்தில் வந்து கொண்டிருக்கும் போது, வளைவில் வேகமாக வந்த தனியார் பேருந்து மொபட்டில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் நடராஜனுக்கு படுகாயமடைந்தான். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பங்கஜத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய பேருந்து டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.