Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து-மொபட் மோதல்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆண்டிகாடு பகுதியில் திருப்பதி என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பர் சேகர் என்பவருடன்திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிபாளையத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மொபட்டை திருப்பதி ஓட்டி சென்று கொண்டிருந்தபோது பள்ளிபாளையம் யூனியர் அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் திருப்பதி பலத்த காயம் அடைந்த நிலையில் அவரது நண்பர் சேகர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த திருப்பதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் திருப்பதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் திருப்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |