கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவந்தூர் கிராமத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மாற்றுத்திறனாளியான எனக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். 2 மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். எனது மனைவி பாவந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து அதிகாரிகள் எனது மனைவியை 15 கி.மீ தொலைவில் இருக்கும் பேருந்து வசதி இல்லாத சேரந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதனால் வேலைக்கு சென்று வந்து, என்னையும் கவனிக்க முடியாமல் அவர் சிரமப்படுகிறார். எனவே சொந்த ஊரான பாவந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு எனது மனைவியை இடமாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.