Categories
தேசிய செய்திகள்

பேருந்து வாங்குவதில் முறைகேடு…. 4வது மந்திரி மீது புகார்…. தலைநகருக்கு வந்த அடுத்த சோதனை….!!!!

டெல்லி அரசால் டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்பட்ட 1000 தாழ்ந்த தரைதள பேருந்துகள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் சிபிஐ விசாரணையை துவங்கியுள்ளது. புது பேருந்துகள் வாங்குவதற்காக ஜூலை 2019 கொள்முதல் ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும், தொடர்ந்து மார்ச் 2020ல் நடந்த ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார் பெறப்பட்டது. பேருந்துகள் வாங்கிய இக்குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்துதுறை மந்திரியை நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்ததாக இந்த வருடம் ஜூன் மாதம் டெல்லி துணைநிலை கவர்னருக்கு புகார்வந்தது. ஜூலை மாதம் தலைமைச் செயலாளருக்கு இப்புகாரை அனுப்பிய கவர்னர், ஆகஸ்ட் மாதம் தலைமைச் செயலாளரிடமிருந்து அறிக்கையை பெற்றிருந்தார்.

பேருந்துகள் வாங்கியதில் முறைகேடு குறித்த வழக்கில், தலைமைச் செயலாளர் நரேஷ்குமார் பரிந்துரையை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சிக்கு புது சிக்கல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்விசாரணை அரசியல் உள் நோக்கம் கொண்டது என டெல்லி அரசு குற்றம்சாட்டியது. இதுபற்றி டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்துகள் வாங்கப்படவில்லை, டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லிக்கு அதிகளவு படித்த கவர்னர் தேவை. இந்த மனிதருக்கு அவர் என்ன கையெழுத்துப் போடுகிறார் என தெரியவில்லை.

அவர் மீது பல கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. கவனத்தை திசை திருப்பவே இது போன்ற விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். 3 மந்திரிகள் (முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் சதேந்தர் ஜெயின்) மீது அற்பமான புகார்களை அளித்த அவர், தற்போது 4வது மந்திரி மீது புகார் அளித்துள்ளார் என டெல்லி அரசு குற்றம் சாட்டியது. காதி கிராமத்தொழில் ஆணையத்தின் தலைவராகயிருந்து ரூபாய் .1,400 கோடி ஊழல் செய்ததாக தற்போதைய டெல்லி கவர்னர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவர் டெண்டர் இல்லாமல் தன் மகளுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார் என ஆம் ஆத்மி கட்சி கவர்னர் சாக்சேனா மீது புகார் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |