சீனாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான குய்சோ மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று தாவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென்கிழக்கே 170 கிமீ (105 மைல்) தொலைவில் உள்ள சாண்டு கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பேருந்தில் 47 பேர் பயணித்துள்ளதாகவும், காயமடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#BREAKING 27 people killed in China bus crash: state media pic.twitter.com/bVReJpTN7b
— AFP News Agency (@AFP) September 18, 2022