புதுக்கோட்டை மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை வாலிபர் இயக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் கோட்டைப்பட்டினம் செலவதற்காக அரசு பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தில் ஏறிய ஆண் ஒருவர் திடீரென பேருந்தை இயக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து டிரைவர் அவரை கீழே இறக்கிய பின்பு அவரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் அறந்தாங்கி கோட்டையை சேர்ந்த சின்ராசு என்பது தெரிய வந்தது. அவரிடம் இனிமேல் இப்படி செய்யக் கூடாது என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.