Categories
அரசியல் மாநில செய்திகள்

பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு வாக்களித்த ஓட்டுநர்…. வெளியான புகைப்படம்…..!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தர்மபுரியில் ஸ்ரீதர் என்ற தனியார் பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு வாக்களித்தார். சேலம் நோக்கி பயணிகளுடன் வந்த இவர், பொம்மிடியில் உள்ள வாக்குச்சாவடியில் பேருந்தை நிறுத்தி, பேருந்தின் உள்ளே இருந்த பயணிகளிடம் அனுமதி கேட்டுவிட்டு ஓடோடி சென்று வாக்களித்து திரும்பினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |