Categories
தேசிய செய்திகள்

பேருந்தை தாக்கிய யானை…. தும்பிக்கையால் பேருந்தை தள்ளி அட்டகாசம்…. வைரல்….!!!!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் உள்ள ராஜகோவிந்பூர் அருகே சாலையில் சென்ற பேருந்தை காட்டு யானை ஒன்று பின்புறமாக இருந்து தாக்கி சில மீட்டர் தூரம் வரை தும்பிக்கையால் தள்ளிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது. அந்தக் கூட்டத்திலிருந்த குட்டியானை ஒன்று கிராமத்தில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

நேற்று 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் யானையை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் நடந்து சில மணி நேரத்திலேயே அதே வனப்பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து பின்னாலிருந்து தாக்கிய காட்டு யானை ஒன்று, அதை தும்பிக்கையால் சில மீட்டர் தூரத்திற்கு தள்ளியது. யானையின் இந்த தாக்குதலால் அச்சமடைந்து பேருந்தில் இருந்த ஓட்டுநர் உட்பட பயணிகள் அனைவரும் இறங்கி ஓட்டம் பிடித்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |