காட்டு யானை அரசு பேருந்தை தாக்க முயன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஓவேலி நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்து ஒத்தக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென அவ்வழியாக சென்ற லாரியை தாக்க முயன்றது. ஆனாலும் லாரி வேகமாக சென்றதால் பின்னால் வந்த அரசு பேருந்தை நோக்கி காட்டு யானை வேகமாக ஓடி வந்து முன்பக்க கண்ணாடியை உடைக்க முயன்றது.
இதனால் அச்சத்தில் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். அப்போது ஓட்டுநர் பேருந்தை திருப்பியவாறு ஓட்டி சென்றார். உடனடியாக அந்த காட்டு யானை பேருந்தின் பக்கவாட்டு வழியாக சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.