Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தியபோது…. சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி…. கோவையில் சோகம்….!!!

கோவை மாவட்டம், சிறுவாணி சாலையில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பேரூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார் . அப்போது முன்னாள் சென்ற பேருந்தை வாலிபர் முந்தி செல்ல முயன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த வாலிபர் செளரிபாளைய பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பதும், உடன் வந்த இளம்பெண் பூலுவப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த ஆர்த்தி (19) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |