பேருந்துக்கும் லாரிக்கும் இடையே மோட்டார் சைக்கிள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் சாலையில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது அருகே அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக ஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், லாரியும் பேருந்தை முந்தி முயன்றுள்ளது. இதனையடுத்து அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய ஸ்டீபனின் மோட்டார் சைக்கிள் பேருக்கும் , லாரிக்கும் இடையே சிக்கிய அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஸ்டீபனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.