பேருந்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திலிருந்து அணைக்கரையை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளார். அப்போது வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி சிவகுமார் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபர் சிவகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து சிவகுமார் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர், ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் பகுருதீன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் பகுருதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.