Categories
மாநில செய்திகள்

பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை… கே என் நேரு உத்தரவு…!!!

பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் கே என் நேரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பேரூராட்சிகளின் ஆணையரகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகள் சார்பில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் ஒன்று அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 528 பேரூராட்சிகளில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், மூலதன மானிய நிதி, பராமரிப்பு நிதி, நபார்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி போன்ற பல திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு விரிவாகப் பேசினார்.

இதையடுத்து மக்கள் தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் உள்ள பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவும், 50 ஆயிரத்திற்கு கீழ் உள்ள பகுதிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முழுமையான திட்டம் வகுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் அனைத்து வீடுகளும் இணைக்க நடவடிக்கை எடுக்கவும் கே என் நேரு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |