பாரதிய ஜனதா கட்சி 8 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளான வெள்ளிமலை-15, வில்லுக்குறி-15, தென்தாமரைகுளம்-15, புதுக்கடை-15, மண்டைக்காடு-15, கணபதிபுரம்-15 இடைக்கோடு-18, இரணியல்-15 இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்ற நிலையில், தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த 8 பேரூராட்சிகளிலும் நடைபெற்ற தலைவர் போட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றி பெற்றனர்.
இதில் புதுக்கடை பேரூராட்சியில் ஜாக்லின் ரோஸ் கலா என்பவரும், இரணியல் பகுதியில் ஸ்ரீகலா, வில்லுக்குறி பகுதியில் விஜயலட்சுமி, மண்டைக்காடு பகுதியில் ராணி ஜெயந்தி, தென்தாமரைகுளம் பகுதியில் கார்த்திகா பிரதாப், கணபதிபுரம் பகுதியில் ஸ்ரீவித்யா, இடைக்கோடு பகுதியில் உமாதேவி, வெள்ளிமலை பகுதியில் பாலசுப்ரமணியன் என்பவரும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.