மொபட் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே இருக்கும் துரைசாமிபுரத்தில் விவசாயியான சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களது மருமகளுக்கு சேர்ந்தமரம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக சுப்பையா தனது மொபட்டில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சுப்பையா இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார் .
இவர் துரைசாமிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சுப்பையாவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார் . இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பையாவின் சடலத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.