இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வாடிக்கையாளர்கள் பேலன்ஸ் பார்க்க சில ஈஸியான வழிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
சேமிப்பு திட்டங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு வங்கி சேவையை வழங்குவதற்காக இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் என்ற வங்கி சேவையை தபால்துறை தொடங்கியது. இதில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக வங்கி சேவையை எளிதில் பெற முடியும். பணம் அனுப்புவது பெறுவது போன்றவை மட்டுமல்லாமல் கட்டணம் செலுத்துவது போன்ற பல வசதிகள் இதில் உள்ளது. மேலும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான கணக்குகளில் இதன் மூலம் சுலபமாக பணத்தை அனுப்ப முடியும்.
இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் வந்த பிறகு வாடிக்கையாளர்களின் சிரமம் குறைந்துள்ளது. மற்ற வங்கிகளை போல இதிலும் வாடிக்கையாளர்கள் நிறைய சேவைகளை பெற்று வருகின்றன. இந்த வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் எவ்வளவு? என்பதை தெரிந்துகொள்வதற்கு மொபைல் ஆப்பில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் வாடிக்கையாளரின் மொபைல் நம்பருக்கு பேலன்ஸ் விவரம் வந்துவிடும்.
வாடிக்கையாளர்கள் 8424046556 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அதே போல மினி ஸ்டேட்மென்ட் எடுப்பதற்கு மற்றொரு நம்பர் உள்ளது. அதற்கு மிஸ்டு கால் கொடுத்தால் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளை விவரங்கள் எஸ்எம்எஸ் மூலமாகவே கிடைக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு இந்த மிஸ்டு கால் நம்பர் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மினி ஸ்டேட்மென்ட் பெற வாடிக்கையாளர்கள் முதலில் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கு REGISTER என டைப் செய்து 7738062873 என்ற நம்பருக்கு SMS அனுப்ப வேண்டும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து தான் இதை செய்ய வேண்டும். மற்ற நம்பரிலிருந்து அனுப்பினால் இந்த சேவையை பெற முடியாது.