பெங்களூரு மாநிலத்தில் காதலர் ஒருவன் பேஸ்புக் காதலிக்காக தனியாக வீடு எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
துமகூரு மாவட்டம் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்பவர் பேஸ்புக் மூலம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஆகியுள்ளார். இருவரும் செல்போன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசி வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை அடுத்து சுரேஷ் தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். அஸ்வினியும் அங்கு செல்ல அவருக்கு திருமண ஆசை காட்டி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
சில நாட்களுக்கு பிறகு சுரேஷ் நடத்தையில் மாற்றம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் அவரிடம் அஸ்வினிடம் பேசவில்லை. இதையடுத்து அஸ்வினி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை வாங்க மறுத்த காவலர்கள் வேறு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு கூறினார். இதையடுத்து மனமுடைந்து அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த அஸ்வினியின் பெற்றோர் சுரேஷ் தான் தன் மகளை கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து சுரேஷ்சை போலீசார் தேடிய போது அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது ஃபேஸ்புக் கணக்கு அளிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாக இருந்த சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.