Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பேஸ்புக்கில் வந்த பதிவு…. அதிக வட்டி கிடைக்கும்…. நம்பி ரூ 7,00,000ஐ இழந்த பெண்…. விசாரணையில் சைபர் கிரைம் போலீசார்…!!

வேலூர் அருகில் அதிக வட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூபாய் 7 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ராமன் தெருவில் வசித்து வரும் தொழிலாளி மதன்ராஜ்,  இவர்  மனைவி 37 வயதான சுஜானா.இவர் செல்போனிற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு மெசேஜ் வந்தது. பேஸ்புக் மெசேன்ஜரில் வந்த  அந்த மெசேஜ்யில் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கும் என்று ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அதை உண்மை என்று நம்பிய சுஜானா அந்த லிங்க்கில் சென்று, அதில் கேட்கப்பட்ட வங்கிக்கணக்கு, ஆதார் எண் உட்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்தார். அதன்பின்  மர்மநபர்கள்  வங்கிக்கணக்கு எண் ஒன்றை அனுப்பினார்கள்.  அவர்கள் சொன்னபடி அந்த வங்கிக்கணக்கிற்கு சுஜானா தான் சேமித்து வைத்த பணம் உறவினர், நண்பர்களிடம் பெற்ற பணம்  அனைத்தையும் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.7,13,000 அனுப்பியுள்ளார்.

மேலும் அவர் செலுத்திய தொகை மற்றும் அதற்கு உண்டான  வட்டித்தொகை அனைத்து விவரமும் அந்த லிங்க்கில்  கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் செலுத்திய தொகையில் இருந்து கொஞ்சம் பணம்  அந்த இணைப்பு மூலம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால்   ரொம்ப நேரம்  முயன்றும் அதில் இருந்து பணம் எடுக்க இயலவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜானா அந்த மர்மநபரின் செல்போனிற்கு  தொடர்பு கொண்டு பேச முயன்ற போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. மெசேன்ஜரில் இதுதொடர்பாக கேட்டபோதும் எந்த பதிலுமில்லை. அதற்கு பிறகு தான் சுஜானாவுக்கு அதிக வட்டி கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி மர்ம நபர் ஏமாற்றி ரூ.7,13,000 பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |