இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதனால் பலரின் சொந்த விவரங்கள் சமூக வலைத்தள பயன்பாட்டின் மூலம் ஒரு சில நேரங்களில் திருடப்படுவது வழக்கமாகிவிட்டது. அவ்வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதன் மூலமாக தனி நபர் விவரங்கள் திருடப்படுவதாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இதனை முன்னாள் கூகுள் பொறியாளர் ஆன பெலிக்ஸ் க்ராஸ் என்பவர் கண்டறிந்து அம்பலப்படுத்தி உள்ளார்.ஐபோனில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டால் பயன்படுத்தும் போது அதில் வரும் விளம்பரங்களை தொடும்போது அவை சபாரி பிரவுசரில் ஓபன் ஆகாமல் அந்த செயலிலேயே ஓபன் ஆவதன் மூலம் நமது தனிப்பட்ட விவரங்கள் திருடப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.