ஹரியானா மாநிலம் குருக்கிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒரு நிறுவனத்தில் ஹெச் ஆர்ராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் சாகர் சிங் என்ற இளைஞருடன் பேசி வந்துள்ளார். இருவரும் பேஸ்புக் மூலம் பழக ஆரம்பித்து பின்னர் இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் பேசி பழகி தன்னை டெல்லியைச் சேர்ந்த வைர வியாபாரியின் மகன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு ஹோட்டலில் ஒன்றாக அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அப்போது தன் பெயரில் உள்ள இரண்டு கோடி ரூபாய் செக்கை வங்கியில் போட்டு பணம் எடுப்பதற்கு ஒரு லட்சம் பணம் தேவை என்று கூறி அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன் என்று கூறி மிரட்டி அவரிடம் 6.5 லட்சம் வரை பணத்தைக் கறந்துள்ளார். தொடர்ச்சியாக அவரிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்யவே அப்பெண் ஹரியான மாநிலம் குருக்கிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த வழக்கை நொய்டா காவல்துறைக்கு மாற்றினார். பிறகு நொய்டா காவல்துறையினர் சாகர் சிங்கை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.