Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் காதலன்… தேடி சென்ற 8ஆம் வகுப்பு மாணவி… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேஸ்புக் காதலனை பார்க்க மாணவியை அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை அடுத்துள்ள முக்கம் என்ற பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அந்த சிறுமிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நேரலகிரியை சேர்ந்த கூலித் தொழிலாளியான 22 வயதுடைய தரணி என்பவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தனது காதலனை பார்ப்பதற்கு தன்னை கிருஷ்ணகிரி அழைத்துச் செல்ல வேண்டும் என அதே பகுதியில் இருக்கும் ஏற்கனவே பழக்கமான 22 வயதுடைய விபின் ராஜ் என்பவரை அழைத்துள்ளார்.

அதனால் விபின் ராஜ் கடந்த இரண்டாம் தேதி தனது நண்பர்கள் அகித் ராஜ் மற்றும் ஜோபின் என்பவருடன் மாணவியை காரில் கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் விபின் ராஜ் உள்ளிட்ட 3 பேரும் அந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.அதன்பிறகு ஓசூர் பேருந்து நிலையத்தில் அந்த மாணவியை இறக்கிவிட்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். தனது காதலனை தொடர்பு கொண்ட மாணவி நடந்ததை அவரிடம் கூறியுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனது பெரியப்பா மகள் நதியா என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று மாணவிக்குஅடைக்கலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மாணவி மாயமானதாக அவரின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில், காதலன் தரணியை கேரள மாநிலம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதன்பிறகு காமராஜ் நகரில் அவர் இருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.அந்த நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி கொடுத்த புகாரின் பேரில் மாணவியை பலாத்காரம் செய்த விபின்ராஜ், அகித்ராஜ் மற்றும் ஜோபின் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |