Categories
தேசிய செய்திகள்

“பேஸ்புக் காதல்” தேடி சென்ற சிறுமி….. “நான் உதவுறேன்” தெரியாதவரின் வாக்கு…. வழியில் நேர்ந்த கொடுமை…!!

பேஸ்புக் காதலனை சந்திக்க சென்ற சிறுமி வழியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கேரள மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த தரணி என்பவருடன் பழகி வந்துள்ளார். நட்புடன் பழகி வந்த இவர்கள் நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஃபேஸ்புக் மற்றும் போனில் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் நேரில் சந்திக்க முடிவு எடுத்தனர். இதனிடையே சிறுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தான் சந்தித்த விபின்ராஜ் என்ற இளைஞரிடம் தனது பேஸ்புக் காதல் பற்றியும் அவரை பார்ப்பதற்கு ஓசூர் செல்ல இருப்பதையும் கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞன் தான் உதவி செய்வதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தனக்கு அறிமுகம் இல்லாத இளைஞனை நம்பி கடந்த 2ஆம் தேதி சிறுமி வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். தனது காதலனிடமும் தான் வருவதை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் காரில் தனது நண்பர்கள் இருவரை விபின்ராஜ் அழைத்துச்சென்றார். போகும் வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தியவர்கள் காரில் வைத்தே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தனியாக சிக்கிய சிறுமியால் அவர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை. அதன்பிறகு ஓசூர் பேருந்து நிலையத்தில் அந்த கும்பல் சிறுமியை இறக்கிவிட்டு கிளம்பிச் சென்றுள்ளது.

பின்னர் சிறுமி தனது காதலனிடம் நடந்தவற்றை தெரிவிக்க அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதனிடையே மகளை காணாத பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை தொடங்கியதும் ஓசூர் அருகே சிறுமியின்  செல்போன் சிக்னல் இருப்பதை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று மீட்டனர். அதோடு தரணியை காவல்துறையினர் கைது செய்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனக்கு நடந்த அத்தனை கொடுமைகளையும் தெரிவிக்க சிறுமியை அழைத்துச் சென்ற விபின்ராஜ் அவரது நண்பர்கள் அஜித்ராஜ் மற்றும் ஜோபின் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |