பேஸ்புக் விவகாரம் தொடர்பாக காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியினர் இன் வெறுப்பு பேச்சுகள் பேஸ்புக்கில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருப்பதை அந்த வலைத்தள நிறுவனம் தடுத்து நிறுத்த தவறி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து மத்திய மந்திரியும் பாரதிய ஜனதா மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் அளித்துள்ள பேட்டியில், ” காங்கிரஸின் செல்வாக்கு குறைந்து விட்டதால், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அந்த கட்சி ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது.
இது போன்ற தளங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது” என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் தான் விரும்புவது போல் செயல்படாத நிறுவனங்கள் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் நிர்பந்தத்தின்படி செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நம்புவதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.