Categories
தேசிய செய்திகள்

போலீசாருக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!!

முக்கிய விழாக்களை கொண்டாடுவதற்கு டெல்லி காவல் துறையினருக்கு விடுமுறை வழங்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

டெல்லி காவல் துறை பணியாளர்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் முக்கியமான விழாக்களை கொண்டாட விடுமுறை வழங்கப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் தானாவின் ஒப்புதலுடன் கூடிய அதிகாரபூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல முக்கியமான நிகழ்வுகளில் காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இயலாமல் பணி செய்து வருவது இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் ஒரு எதார்த்தமான நிகழ்வாக உள்ளது.

ஆனால் காவல் துறையினருக்கும் சக மனிதர்களை போல அனைத்து ஆசைகளும் உள்ளது. அவர்களது உணர்வுகளையும் மதிக்க வேண்டும். எனவே காவல்துறையினருக்கும் விடுமுறை வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி காவல் துறையின் இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். இதுகுறித்து கூறிய ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாட்களை கொண்டிருப்பர். அதனை தங்கள் குடும்பத்துடன் கழிக்க வேண்டும் என விரும்புவர். ஆனால் காவல் துறையில் இருப்பவர்களுக்கு அந்த மகிழ்ச்சியான நாட்கள் கிடைப்பதில்ல. இந்த அறிவிப்பால் இனிமேல் அனைத்து காவல் துறையினரும் பெரு மகிழ்ச்சி அடைவர் என அவர் கூறினார்.

Categories

Tech |