பைக்காரா அணையில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் படகு சவாரி செய்ய தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டன.
தமிழ்நாடு சுற்றுலா தலத்தில் ஒன்று ஊட்டி. இந்த ஊட்டி அருகே பைகாரா அணையில் படகு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர். பயணிகள் படகு சவாரி செய்யவதற்கு எற்றவாறு 8 இருக்கைகள் உடன் 18 படகுகள், 10 இருக்கைகள் உடன் மூன்று படகுகள், 4 அதிவேக படகுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த பகுதியில் அணையின் இயற்கை அழகு, தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளை பார்த்து ரசித்தல், அடர்ந்த வனப்பகுதி இதெல்லாம் சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கின்றது. பைகாரா நீர்மின் திட்டத்தின் கீழ் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த சமவெளி பகுதியில் கோடை காலம் தொடங்கியதால் மின் உற்பத்தி அதிகரிக்கபட்டு தினமும் தண்ணீர் எடுக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைகின்றது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டில் பருவ மழை அதிகமாக பெய்ததால் 100அடி கொள்ளளவு கொண்ட பைக்காரா அணையில் 95 அடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. இந்த ஆண்டு தற்போது மூன்று மாதங்களில் அணையின் நீர்மட்டம் 95 அடியிலிருந்து 37 அடியாக குறைந்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய நடந்து செல்லும் 137 படிக்கட்டுகள் வெளியே தெரிகின்றது. அதன் கீழ் 15 அடிக்கு கீழே தண்ணீர் உள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல தற்காலிய நடைபாதை அமைக்கப்பட்டு சுற்றிலும் பிடிப்பதற்காக கம்புகள் வைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக பயணிகள் மிதவை பகுதிக்கு சென்று பின் மோட்டார் படகுகளில் சவாரி செய்கின்றனர்.
இதுதொடர்பாக சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி கூறியதாவது, தினமும் 4 அடி நீர் மட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதால் நீர் மட்டம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மிகக்குறைவாக நீர்மட்டம் உள்ளது. இந்த நிலை நீடித்தால் படகு சவாரி செய்வது கடினம் என்றார்.பருவ மழை பெய்தால்தான் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.