Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பைக்கில் அதிவேகம்…! அந்தரத்தில் பறந்த பெண்…. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்கிறர்கள். இப்படி அதிவேகமாக செல்வதன் காரணமாக தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு வளர்த்து வரும் நிலையில் பிள்ளைகள் இதுபோன்று விபரீதமான செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் அதிவேகமாக சென்ற பைக் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு பைக்கில் இருவர் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது பைக் நிலை தடுமாறி சாலை குறுக்கே இருந்த தடுப்பின் ஏறியது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்து இருந்த பெண் அந்தரத்தில் பறந்து கீழே விழுந்தார். இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் இந்த சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

Categories

Tech |