ஏகே61 திரைப்படத்தின் டப்பிங் பணியில் அஜித் இணைய இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர். ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள்.
ரசிகர்கள் தற்பொழுது படத்தின் அப்டேட்டை கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். இந்த நிலையில் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் இமயமலையை சுற்றியுள்ள இடங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டதாக சொல்லப்படுகின்றது. ஒரு வாரம் இந்த இமயமலை பைக் பயணத்தை முடித்துக் கொண்டு அஜித் மீண்டும் ஏ கே 61 திரைப்படத்தின் டப்பிங் பணியில் ஈடுபடுவார் என செய்தி வெளியாகியுள்ளது.