விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இவர் அண்மையில் தனது 5 வருட காதலியை திருமணம் செய்து கொண்டார்.என் நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் பைக்கில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். புகழ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில், ஹெல்மெட் அணியாமல் கையை விட்டு ஓட்டியவாறு மீசையை முறுக்கிக் கொண்டு வேகமாக செல்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சாலை விதிகளை பின்பற்றாத புகழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்துள்ளனர்.