பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வடுகபாளையம் பகுதியில் சுப்பிரமணியம் ஜானகி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் தனது உறவினர் வீட்டில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் கவுண்டம்பாளையம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் ஜானகி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.