சாலையில் சென்ற பசுவை எட்டி உதைத்து இளைஞர்கள் விபத்தில் சிக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த பசுவை இருவரில் ஒருவர் எட்டி உதைத்துள்ளார். அதனை எடுத்து அவர்களது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பசுவை உதைத்த இளைஞருடன் பயணித்த மற்றொரு இளைஞரும் காயமடைந்துள்ளார். நாம் செய்யும் நன்மையோ தீமையோ அதுவே நமக்கும் அமையும் என்பதற்கு இந்த இளைஞரின் செயல் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
https://twitter.com/i/status/1309807817650589696