செங்கல்பட்டில் வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் ராம் நகரில் வசித்து வருபவர் லட்சுமி. 53 வயதுடைய இவர் நேற்று காலை தனது வீட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கில் வந்த 2 நபர் லட்சுமி கழுத்தில் உள்ள 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று உள்ளனர். இதை குறித்து லட்சுமி ஓட்டேரி காவல்துறையினரிடம் புகார் செய்து உள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.