Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பைக்கில் வேகமாக வந்து…. “செல்போன் பறிப்பு”…. உடனே மாணவி எடுத்த முடிவால் சிக்கிய மூவர்..!!

கல்லூரி மாணவியிடம் செல்போனை பறித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகள் ஆர்த்தி(19) பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விஜயமங்கலம் ஊத்துக்குளி சாலையில் ஆர்த்தி நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்த பாதையாக மோட்டார் வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென ஆர்த்தி வைத்திருந்த 2 செல்போன்களை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

உடனே ஆர்த்தி அந்தத் திருடர்கள் சென்ற சாலையை அறிந்துகொண்டு அக்கம்பக்கத்தினரிடம் செல்போனை வாங்கி அந்த சாலையில் உள்ள சொந்தக்காரர்களுக்கு தகவல் அளித்துள்ளார். உடனே அந்தப் பகுதி உள்ள சொந்தக்காரங்கள் மற்றும் பொதுமக்கள் வழிப்பறி திருடர்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அதேமாதிரி ஆர்த்தி சொன்ன அடையாளத்தில் மோட்டார் வாகனத்தில் மூன்று பேர்கள் வந்தனர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து பெருந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் பிரகாஷ் (22),திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்திக்(21), நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த தனசேகரன்(29) என்றும், அத்துடன் செல்போனை திருடி சென்றது இவர்கள்தான் என்று தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மூவரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |