விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Vikram second schedule wrapped ⚡@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @RKFI #Vikram #vikramsecondschedule pic.twitter.com/sjcAIwda8N
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 2, 2021
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் கமல் ஹாசனுடன், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ், ஒளிப்பதிவாளர் கிருஷ் கங்காதரன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.