மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம், மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகில் பை ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் இது தொடர்பாக வாலிவ் பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பைக்குள் மாணவி ஒருவரது உடல் திணித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த மாணவி உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது.
அதனை தொடர்ந்து மாணவி உடல் வசாய் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 15 வயதுடைய அம்மாணவி மும்பையின் அந்தேரி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் காலையில் பள்ளிக்கு சென்ற மாணவி நேற்று மாலை வரையிலும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பின் மாணவியின் உடல் கிடைத்த நிலையில், கொலை வழக்குபதிவு செய்து காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.