மதுரையில் பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அச்சம்பட்டியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஜெய சங்கரி. இந்நிலையில் தம்பதியர் இருவரும் பாத்திமா கல்லூரி சாலையில் தங்களது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் தம்பதியருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள், திடீரென்று சம்பத்தின் மனைவி அணிந்திருந்த 15 பவுன் தங்க நகையை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் செல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.