Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பைக் ஓட்ட சொல்லி தரேன்…. ஆசையாக பேசி சிறுமியை சீரழித்த கொடூரன்… 7 ஆண்டுகள் சிறை தண்டனை… கோர்ட் அதிரடி..!!

பைக் ஒட்ட கற்று தருவதாக கூறி ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த தொழிலாளியான ராசு என்ற சித்தராசு(41). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த போது இவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர்  வீட்டின் அருகே 11 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்துள்ளார். அந்த சிறுமி அரசு பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு தந்தை இறந்துவிட்டதால் தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பத்தன்று  உடல்நிலை சரியில்லை என்று பள்ளிக்கூடத்திற்கு போகாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை பார்த்த சித்தராசு அந்த சிறுமியிடம் பைக் ஓட்டக் கற்றுத் தருவதாக கூறி அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து நடந்ததை  சிறுமி தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த தாயார் இது குறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இப்புகாரின் பேரில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராசுவை கைது செய்துள்ளார். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆர்.மாலதி தீர்ப்பு கூறினார். அத்தீர்ப்பில் ராசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபதாரமும் விதித்துள்ளார். அபதாரம் செலுத்த தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் காவல் துறை சார்பாக அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

Categories

Tech |