Categories
தேசிய செய்திகள்

பைக், கார் வாங்குவோருக்கு… ஜனவரி 1 முதல்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பைக் மற்றும் கார்கள் விலை அதிகரிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்தது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக விற்பனையில் ஏற்பட்ட மந்த விலை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பைக் மற்றும் கார்கள் விலை அதிகரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, மஹிந்திரா, ரெனோ மற்றும் எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் 3 சதவீதம் வரையும், 3000 முதல் 5000 ரூபாய் வரையும் விலை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள் விரைவில் விலை உயர்வை அதிகரிக்க உள்ளன. இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |